நடுரோட்டில் இளைஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய மற்றொரு இளைஞர் : ஷாக் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2022, 4:16 pm

திருச்சி : திருவானைக்காவலில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர்
மற்றொரு வாலிபரை நடுரோட்டில் அரிவாளுடன் ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு.
இவரது மனைவி சத்யா. தம்பதிகள் இருவருக்கும் இடையே எழுந்த கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்தநிலையில் திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் சந்துருவின் மனைவி சத்யாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சந்துரு அரிவாளை எடுத்துக் கொண்டு சிவக்குமாரை வெட்ட துரத்தியுள்ளார். தொடர்ந்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று சந்துருவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vedhika Marriage News அவசர அவசரமாக நடந்த நடிகை ‘வேதிகா’ கல்யாணம்…அவரே வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் ஷாக்.!