தமிழகம்

அரசுப் பணிக்காக மதமாற்றம்.. தமிழக பாஜக ஸ்டாலினுக்கு முக்கிய வலியுறுத்தல்!

அரசு பணிக்காகவே மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “புதுச்​சேரியைச் சேர்ந்தவர் சி.செல்​வ​ராணி. கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய இவர், புதுச்​சேரி யூனியன்பிரதேச அரசின் கிளார்க் பணியிடத்​துக்காக பட்டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் எனக்​கூறி விண்​ணப்​பித்து தேர்ச்சி பெற்​றார். சாதிச் சான்​றிதழ் சரிபார்ப்​பின்​போது அவர் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர் என்பது கண்டறியப்​பட்​டது. அதைத் தொடர்ந்து செல்வராணி, தனது தந்தை​ இந்து பட்டியலினத்தவர் என்பதால், தனக்கும் பட்டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் என சாதி சான்​றிதழ் வழங்​கக் கோரி​யுள்​ளார்.

அவரது விண்​ணப்​பத்தை புதுச்சேரி அரசு அதிகாரிகள் நிராகரித்​தனர்.செல்வராணியின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது.செல்வராணி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஒரு மதத்​தில் இருந்து மற்றொரு மதத்​துக்கு மாறுவது என்பது அதன் கொள்​கைகள் மற்றும் கோட்​பாடு​களால் உண்மையாக ஈர்க்​கப்​பட்​டிருக்க வேண்​டும். உண்மையான நம்பிக்கை இல்லாமல், இடஒதுக்கீட்​டின் பலனைப் பெறுவதற்காக மட்டும், மதம் மாறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடி​யாது.

இதுபோன்ற மறைமுக நோக்​கங்கள் இடஒதுக்​கீட்டு கொள்​கை​யையே கேலிக்​கூத்​தாக்​கி​விடும்.மனுதாரர் கிறிஸ்துவ மதத்தை தீவிரமாக கடைபிடிக்​கும்​போது, அரசு வேலை​வாய்ப்​புக்காக இந்துவாக தன்னை அடையாளப்​படுத்த முற்​படுவதை ஏற்க முடி​யாது. மேலும் அது அரசியலமைப்பு சட்டத்​தையே மோசடி செய்​வதற்கு சமம்’ என தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய குடிமகன்கள் யாரும், எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதை நமது அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது.

ஒரு மதத்தின் மீது உண்மையாகவே பிடிப்பு ஏற்பட்டு ஒருவர் மதம் மாறினால் அவரை யாராலும் தடுக்க முடியாது. தடுக்கவும் கூடாது. ஆனால் இந்தியாவில் பெரும்பாலான மதமாற்றங்கள் இயல்பாக நடப்பதில்லை. இந்தியாவில் இந்து மதத்தினரை மட்டும் குறி வைத்து மத மாற்றங்கள் நடத்தப்படுகின்றன. ‘சேவை’ என்ற பெயரில் தன்னார்வ தொண்டு அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, மதமாற்றத்தையே முழு நேர தொழிலாக செய்யக்கூடிய நிறுவனங்கள் இங்கே ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.

அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி குவிகிறது. இவர்கள் இந்து மதத்தை இழிவு படுத்தியும், ஆசை வார்த்தை காட்டியும், ஏமாற்றி இந்துக்களை மதம் மாற்றுகின்றனர். அப்படி மதம் மாற்றப்பட்டவர்களை கொண்டே, மதமாற்றத்தை தீவிரமாக மேற்கொள்கின்றனர். இந்தியாவில் மதமாற்ற முயற்சியை எதிர்கொள்ளாத ஒரு இந்து கூட இருக்கவே முடியாது. வாழ்நாள் முழுவதும் மத ஒற்றுமையை வலியுறுத்திய மகாத்மா காந்தி, தனது சுயசரிதையான ‘சத்திய சோதனை’ நூலில், தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற நடந்த முயற்சிகளை விவரித்து எழுதி இருக்கிறார்.

இன்று வரையிலும் இந்து கடவுளை சாத்தான் என்று கூறி மதம் மாற்றுவதற்காக வீடு வீடாக வந்து கொண்டே இருக்கின்றனர். இப்படி மோசடியாக ஏமாற்றப்பட்டு மதம் மாற்றப்படுபவர்கள் முதலில் இந்து மதத்துக்கும், பிறகு நாட்டுக்குமே எதிரியாகி விடுகின்றனர். சிறுபான்மையினர் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் தனி நாடு கேட்கும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டு வருவதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதனால் தான் மதமாற்றத்தை பாஜகவும், இந்து அமைப்புகளும் கடுமையாக எதிர்க்கின்றன. இந்து மதத்தில் சாதி வேற்றுமைகள் இருப்பதால்தான் பட்டியலின சகோதர, சகோதரிகளுக்கு நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்தே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்து மதத்தில் சாதி வேறுபாடுகள் இருக்கின்றன. அதனால் பாதிக்கப்படுபவர்களை கை தூக்கி விடுவதற்காகவே இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது.

ஆனால், ‘எங்கள் மதத்தில் சாதிகளே இல்லை’ என்று கூற மதம் மாற்றுபவர்கள் பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பறித்துக் கொள்வதை ஏற்க முடியாது என்பதை பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை இப்போது உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. மதம் மாறி பல பத்தாண்டுகள் ஆனவர்கள் கூட, இந்து பட்டியலினத்தவர் என்று சான்றிதழ் பெற்றுக் கொண்டு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்.

அரசு வேலைகளில் மட்டுமல்லாது, நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினத்தவர்களுக்கான இடங்களில், மதம் மாறியவர்கள் போலிச் சான்றிதழ் பெற்று போட்டியிடுகின்றனர். இதனால், உண்மையிலேயே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சென்னை மேயர் தேர்தலிலும், பல்வேறு சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் மீது சர்ச்சை எழுந்தது.

இதையும் படிங்க: சீமான் மீது தொடரும் அதிருப்தி… நாமக்கல் நிர்வாகிகள் எடுத்த அதிரடி முடிவு!

இதுகுறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்பு சட்டத்தின் இடஒதுக்கீடு முறையாக பட்டியலின மக்களுக்கு போய் சேருவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் இது நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கு இப்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

அரசு பணிகளில் பட்டியலினத்தவர் இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களில் சரி பார்த்து, அரசு பணிக்காகவே மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சுக்கு பேச்சு அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

30 minutes ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

1 hour ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

2 hours ago

நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…

3 hours ago

கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…

4 hours ago

வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…

4 hours ago

This website uses cookies.