வனப்பகுதியில் சடலமாக கிடந்த காட்டுயானை: உயிரிழப்புக்கு ‘ஆந்த்ராக்ஸ்’ நோய் காரணமல்ல…வனத்துறை தகவல்..!!

Author: Rajesh
20 March 2022, 3:49 pm

கோவை: மாங்கரை அருகே கடந்த நான்கு நாட்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்ட ஆண் யானைக்கு ஆந்தராக்ஸ் நோய்த்தொற்று இல்லை வனத்துறை உறுதி செய்துள்ளது.

கோவை மாவட்டம் மாங்கரை பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் 30 வயது ஆண் யானை கண்டறியப்பட்டது. யானையின் துவாரங்களில் ஆந்த்ராக்ஸ் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதன் அடிப்படையில் யானையைச் சுற்றி 50 மீட்டர் பாதுகாப்பு போடப்பட்டது.

கடந்த இரு தினங்களுக்கு முன் யானையின் உடைய கழிவு மாதிரிகள் சென்னை ஆய்வகத்திற்கு தொற்று நோய் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்தப் பரிசோதனையில் ஆந்தராக்ஸ் நோய் இல்லை என்பது ஆய்வறிக்கையில் உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் மூலம் உடற்கூறு ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

யானையின் அடிவயிற்றில் குத்து காயம் தென்பட்டுள்ள நிலையில், யானைகள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!