சாதி மறுப்பு திருமணம்.. கம்யூனிஸ்ட் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார் : நெல்லையில் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan14 June 2024, 7:37 pm
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் உள்ள லெனின் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.
நேற்று 6 ஆண்டுகளாக காதலித்து வந்த ஜோடிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் லெனின் சிலை முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த புதுமண காதல் ஜோடி இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள்.
இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்களுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைத்து திருமணம் செய்து வைத்தது.
இதுபற்றி அறிந்த அந்த மணமகளின் வீட்டார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இன்று மாலை திடீரென பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு புக்நுது தங்கள் வீட்டு பெண்ணை அனுப்பி வைக்க கூறியுள்ளனர்.
அப்போது அங்கிருந்தவர்களுக்கும், பெண் வீட்டாருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்க கொண்டனர்.
இதையடுத்து அலுவலகத்தில் உள்ள இருக்கை மற்றும் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் கட்டுப்படுத்த முயன்றும், பெண் வீட்டார் ஆக்ரோஷமாக இருந்ததால் தடுமாறினர்.
பின்னர் பேச்சுவார்த்த நடத்தினர். கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் அளித்ததை அடுத்து பெண் வீட்டை சேர்ந்த 6 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.