ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கியதற்காக கையும் களவுமாக பிடிபட்ட கருவூல அதிகாரி ஏ ராஜா.
கோவை கிக்கானி உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர்.
கடந்த மே மாதம் 31ஆம் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் கிராஜுவிட்டி தொகையை பெறுவதற்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூல அலுவலகத்தின் கல்வி பிரிவில் சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் அணுகியுள்ளார்.
இந்த நிலையில் அங்கு இருந்த ஏ.ராஜா என்ற அதிகாரி பீட்டர் இடம் 2000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஏ டி எஸ் பி திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் இடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: இதுக்கு ஒரு முடிவே இல்லையா? ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!
அதனைத் தொடர்ந்து சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலப் பிரிவின் கல்வி அதிகாரியாக உள்ள ராஜாவை நாடியுள்ளார்.
அதனை தொடர்ந்து ராஜா அந்த பணத்தை தனது மேஜை டிராயரில் வைக்குமாறு கூறியுள்ளார் அதனைத் தொடர்ந்து சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் அவ்வாறே 2000 ரூபாய் பணத்தை மேஜை டிராயரில் வைத்துள்ளார்.
இந்த நிலையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென அலுவலகத்திற்குள் புகுந்து 2000 ரூபாய் பணத்தையும் கைப்பற்றி லஞ்சம் வாங்கிய அதிகாரி ஏ ராஜாவை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.