வனப்பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்களை துரத்திய காட்டுயானை: தவறி விழுந்து ஒருவர் பலி..!!
Author: Rajesh21 ஏப்ரல் 2022, 9:48 மணி
வால்பாறையில் வனப்பகுதியில் ரோந்து சென்ற வேட்டை தடுப்பு காவலர்களை காட்டுயானை துரத்தியதில் ஒருவர் உயிரிழப்பு.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் தொகுதிக்கு உட்பட்ட வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய்முடி எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரிந்த புலியை மானாம்பள்ளி வனச்சரகத்தில் கூண்டு வைத்து புலியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் சந்திரன் மந்திரி மட்டம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதி விட்டு வெளியே வந்த ஒற்றை காட்டு யானை மூன்றுபேரை துரத்தியது.
இதில் மூன்று பேரும் திசைமாறி சென்றுள்ளனர்,காட்டின் குறுக்கு பகுதியில் சென்ற சந்திரன் மரத்தின் வேர் காலில் பட்டு நெஞ்சில் அடிபட்டது. சந்திரனை தேடிவந்த நண்பர்கள் சந்திரனை தூக்கிக்கொண்டு வனப்பகுதி விட்டு வெளியே வந்து வால்பாறை அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
காட்டு யானை துரத்தி வேட்டை தடுப்பு காவலர் உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1
0