யார் வேண்டுமானாலும் உயர்ந்த இடத்திற்கு செல்லலாம்.. அதற்கு இவரு தான் சிறந்த உதாரணம் : கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் உருக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan4 March 2022, 8:28 pm
திருச்சி : யார் வேண்டுமானாலும் உயர்ந்த இடத்தை அடையலாம் என தனியார் பள்ளியில் விளையாட்டு மைதானங்களை திறந்து வைத்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மாணவர் மத்தியில் பேசினார்.

திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டு இருந்த விளையாட்டு மைதானங்களை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் கல்வி ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கிறது. செல்போனை வைத்துக் கொண்டு விளையாட முடியாது, மைதானங்களில் விளையாடும் போது நமது உடல் நன்கு வலுப்பெறும் அதேநேரம் கல்வி கற்கும் திறனும் அதிகரிக்கும்.
யார் வேண்டுமானாலும் உயர்ந்த இடத்தை அடையலாம் என்பதற்கு தோனி சிறந்த எடுத்துக்காட்டு, சிறிய ஊரில் பிறந்து, இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி உலக கோப்பையை பெற்று தந்த பெருமைக்கு சொந்தக்காரர் தோனி.
நாம் அனைவரும் முயன்றால் அப்துல் கலாம் போல பல மாணவர்கள் தமிழகத்திலிருந்து உருவாகலாம். கிரிக்கெட், கால்பந்து என எந்த விளையாட்டு ஆனாலும் அதனை திறம்பட பயின்று அதில் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள் என பேசினார். மாணவ மாணவிகள் தினேஷ் கார்த்திக்குடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஆட்டோகிராப் பெற்றனர்.