ஆசை ஆசையாக வாங்கிய ஆப்பிள் ஜூஸில் விஷப்பூச்சி… ஷாக்கான சிறுமி ; நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் கோரிக்கை..!!
Author: Babu Lakshmanan5 January 2024, 6:37 pm
சிறுமி ஒருவர் ஆசையாக வாங்கிய ஆப்பிள் ஜூஸில் விஷப்பூச்சி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்து உள்ள கிள்ளையிள் பகுதியில் தனியார் பேக்கரி இயங்கி வருகிறது. அதில் சிறுமிக்கு அவரது பெற்றோர் ஆப்பிள் ஜூஸ் வாங்கி உள்ளார். அந்த குளிர் பானத்தில் விஷ பூச்சி இருந்தை கண்ட சிறுமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கும்போது, அந்த ஆப்பிள் ஜூசை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பார்க்கும் பொழுது, அதில் கருப்பு நிற ஆடை ஆடையாக பூச்சி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, கடை உரிமையாளர்கள் கூறுகையில், “அவர் எங்க கடையில் இது போன்ற பொருட்கள் இல்லை,” என்றதாக கூறப்படுகிறது.
மேலும், கிள்ளை இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுலா பிச்சாவரம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கெட்டுப்போன குளிர்பானம் மட்டுமில்லாமல் இங்கு உள்ள அனைத்து பொருட்களும் இதே நிலைதான் உள்ளது என்றும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.