விதியை மீறி நியமனம்.. திமுகவின் இரட்டை வேடம் : குற்றவியல் துறை நியமனத்துக்கு இபிஎஸ் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2024, 1:46 pm

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக கடந்த 2021 முதல் பணியாற்றி வந்த ஹசன் முகமது ஜின்னா தமிழ்நாடு அரசின் குற்றவியல்துறை இயக்குநராக சில நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில், தமிழக குற்றவியல் துறை இயக்குநராக ஹசன் முகமது ஜின்னா நியமனம் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு தலைமை வழக்கறிஞராக இருப்பவருக்கு குற்றவியல் துறை துணை தலைவராக பதவி உயர்வு கொடுத்து, அதன் பிறகு அவர் தலைவராக பொறுப்பேற்பது தான் மரபு.

மேலும் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்ப்பதாக கூறிவிட்டு அதன் அடிப்படையில் தற்போது இந்த நியமனம் நடந்துள்ளது. புதிய குற்றவியல் தொடர்பான நிலைப்பாட்டில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!