சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி: சிறப்பு அதிகாரியை நியமித்து தலைமை செயலாளர் உத்தரவு..!!
Author: Rajesh9 April 2022, 8:49 pm
சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட்போட்டிக்கு சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து தமிழக தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட்போட்டிக்கு சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார்.
மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மாதம் 28 ம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசு சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமனம் செய்துள்ளது.
இதன்படி ஐ.ஏ.எஸ் அதிகாரி தாரேஷ் அகமது என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.