நெருங்கும் கிளைமேக்ஸ்… பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு : நீதிபதி பரபரப்பு உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan6 January 2024, 1:50 pm
நெருங்கும் கிளைமேக்ஸ்… பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு : நீதிபதி பரபரப்பு உத்தரவு!!
கடந்த 2021 ஆம் ஆண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் க்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், முன்னாள் செங்கல்பட்டு எஸ் பி கண்ணனுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது
இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ், கண்ணன் தனித்தனியாக விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா அறிவித்திருந்தார்
இந்நிலையில் வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என ராஜேஷ்தாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்காமல் உள்ள நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா வரும் 12 ஆம் தேதிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்