நெருங்கும் பண்டிகைகள்… குப்பை கூளமாகும் கோவை : காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த தூய்மை பணியாளர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2023, 8:10 pm

நெருங்கும் பண்டிகைகள்… குப்பை கூளமாகும் கோவை : காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த தூய்மை பணியாளர்கள்!

கோவை மாநகராட்சியில் பணிபுரிகின்ற தினக்கூலி பணியாளர்களான துப்புரவு பணியாளர், டிபிசி பணியாளர், குடிநீர் விநியோகப் பணியாளர், ஓட்டுநர், கிளீனர் ஆகிய பணியாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ721 வழங்க வேண்டும் என்றும், 480 நாள் பணி செய்த அனைவரையும் பணி நிரந்தரம் கொரோனா காலத்தில் பணிபுரிந்த தொழிலாளிக்கு சேர வேண்டிய ரூபாய் 15,000 உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாநகராட்சி துணை ஆணையரின் அறிவுரைகள் தொழிலாளிகளுக்கு எதிராக இருந்தது.

உதவியாளர் சமரசம, அவர்களுடைய பேச்சு மாநகராட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதி நம்முடைய வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று தூய்மை பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க ஒன்றிணைந்து போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

சில ஊழியர்கள் அரசுக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் ஆதரவாக உள்ளதால் மாநகராட்சி நம்முடைய கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க தெரியவில்லை.

மாநகராட்சி நமது கோரிக்கை ஏற்க வேண்டும், நாம் முழு மன உறுதியுடன் போராட்ட களத்தில் இருக்க வேண்டும் நமது கோரிக்கை வெற்றியடையும் வரை நாம் தொடர்ந்து போராட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம்.

தொழிலாளுடைய உண்மையான கோரிக்கை வென்றிட அனைவரும் ஒருங்கிணைந்து காலவரையற்ற போராட்டத்தில் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறோம்.

மூன்றாவது நாளாக நாளை காலை எட்டு மணி முதல் தமிழ்நாட்டின் முதல் தொழிற்சங்க தலைவரான வ உ சி பிள்ளை அவர்களின் சிலை முன்பு மூன்றாம் நாள் போராட்டம் தொடர்கிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ