கலைஞரின் கையெழுத்துடன் ரூ.100 நாணயம் ஒப்புதல் தமிழக மக்களின் வெற்றி.. சொல்கிறார் ஜவாஹிருல்லா!!
Author: Udayachandran RadhaKrishnan18 August 2024, 8:02 pm
திருச்சியில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில இளஞரணி செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜவாஹிருல்லாஹ்,
ம.ம.க சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு குறித்த பிரச்சார இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்தாண்டு இறுத்திக்குள் 100 இடங்களில் இருசக்கர வாகன பேரணி நடத்தப்படும். 10 லட்சம் இளைஞர்களை நேரில் சந்தித்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
போதை பொருள் விவகாரத்தில் இன்னும் அதிகமாக விழிப்புணர்வையும், சட்ட நடவடிக்கையும் அரசு எடுக்க வேண்டும்.
சுதந்திர தினத்தன்று மதச்சார்பற்ற சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி உரையாற்றினார். இது அரசமைப்பு சட்டம் தந்துள்ள உரிமைகளுக்கு எதிராகவும், இந்தியாவின் வேற்றுமையில் ஒஎறுமைக்கு வேட்டு வைக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வஃக்பு நிலங்களை ஆக்கிரமிக்க வஃக்பு சட்டத்தை கொண்டு வந்தார்கள். எதிர்ப்பின் காரணமாக அது நாடாளுமன்ற கூட்டிக்குழுவிற்கு அனுப்பபட்டுள்ளது.
இந்த நிலையில் மோடி மதச்சார்பற்ற சிவில் சட்டம் குறித்து பேசியுள்ளார். அந்த உரை பிரதமரின் உரையாக இல்லாமல் அரசியல் கட்சி தலைவரின் உரையை போல் உள்ளதாக சில பத்திரிக்கைகள் விமர்சனம் செய்துள்ளன.
இந்தியா கூட்டணி இதனை எதிர்க்க வேண்டும், எதிர்ப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
தமிழ் வெல்க என்கிற கலைஞரின் சொந்த கையெழுத்துடன் 100ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. ஒன்றிய அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது தமிழக மக்களின் வெற்றியாக உள்ளது.
ஒப்பீட்டளவில் அதிமுக ஆட்சியில் நடைபெற்றதை விட சட்டம் ஒழுங்கு சீர்குழைவு தற்போது மிக குறைவாக உள்ளது.
முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் அனைத்து மக்களுக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் தலித்துகள் முதல்வராக முடியாது என்பதாக திருமாவளவன் பேசிய பேச்சின் ஒரு வாசகத்தை மட்டும் வைத்து கொண்டு அதனை பரப்புரை செய்வது தவறு. தமிழ்நாட்டில் தலித்துகள் அதிக அளவு இருக்கிறார்கள் அதில் ஒருவர் முதலமைச்சராக முடியும் அதனை வரவேற்போம் என்றார்.
இந்த கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான் அப்துல் சமது, ம.ம.க இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.