ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு… அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2023, 2:37 pm
Quick Share

சென்னை, புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆற்காடு சுரேஷ். இவர் மீது கொலை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 18ம் தேதி கும்பல் ஒன்று சுரேசை வெட்டி கொலை செய்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே, 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று அதிமுக பிரமுகர்களான சுதாகர் மற்றும் ஜான் கென்னடி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட, ஜான் கென்னடியே, நெல்லையிலிருந்து கூலிப்படையை வரவழைத்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகிகள் 2 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

“கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த சி.ஜான்கென்னடி, (ஆயிரம்விளக்கு வடக்கு பகுதிக் கழக மாவட்டப் பிரதிநிதி) பி. சுதாகர் பிரசாத், (111 கிழக்கு வட்டக் கழகச் செயலாளர், ஆயிரம்விளக்கு வடக்கு பகுதி) ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Napolean 6 மாதம் கழித்து மீண்டும் தனுஷுக்கு திருமணம் செய்வேன் – குண்டு தூக்கி போட்ட நெப்போலியன்!
  • Views: - 403

    0

    0