அதிமுகவை பார்த்து திமுக அமைச்சர்களுக்கு பயம்? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரியாக்ஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2023, 2:22 pm

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தார்.

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள கோர்ட் யார்ட் ஹோட்டலில் உணவு அருந்திய பின்னர் விமான மூலம் சென்னை செல்கிறார்.

முன்னதாக திருச்சி ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், அதிமுகவிற்கு திமுக அமைச்சர்கள் பயப்படுகிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் என்ற கேள்விக்கு.

என்ன பாத்தா பயந்த மாதிரி உங்களுக்கு தெரிகிறதா.. ? எதிர்க்கட்சித் தலைவர் அப்படித்தான் பேசுவார். யார் யாருக்கு அடிமை என்பது மக்களுக்கு தெரியும், உலகத்திற்கே தெரியும், பாஜகவிற்கு அடிமை அதிமுக தான் என்று.

எங்களுடைய தலைவர் கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் யாருக்கும் பயந்தவர்கள் கிடையாது. கர்நாடகாவில் தண்ணீர் குறித்து கேட்டு முதல்வர் பெற்று தருவாரா என்ற கேள்விக்கு..

கண்டிப்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு தேதியும் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

ராகுல் காந்தி வழக்கிற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். இது குறித்த கேள்விக்கு, நான் நிகழ்ச்சிகள் இருந்ததால் இதனை பார்க்கவில்லை. ஆளுநர் இன்று டெல்லி செல்கிறார் என்ற கேள்விக்கு..

அவருக்கு வேறு வேலைகள் இல்லை. அதனால் தான் டெல்லி சென்று சென்று வருகிறார் என தெரிவித்தார்.

  • Popular Actress Complaint Against Actor Arya நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?