வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்கள் சேதமா? இலவசமாக பெற்றுக் கொள்ள வாய்ப்பு.. உயர்கல்வித்துறை அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 December 2023, 6:29 pm
FLood
Quick Share

வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்கள் சேதமா? இலவசமாக பெற்றுக் கொள்ள வாய்ப்பு.. உயர்கல்வித்துறை அறிவிப்பு!!

தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகள் குறிப்பாக தாமிரபரணி ஆறு ஓடும் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தால் பெருமளவு பாதித்துள்ளன. வெள்ளத்தால் தென்மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பல்வேறு மாணவர்களின் முக்கிய சான்றிதழ்கள் நீரில் மூழ்கின.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்ட்டனர். ஏனென்றால், அந்த ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களின் நகலை பெறுவதற்கு சாதாரண நாட்களில் மிகுந்த சிரமமாக இருக்கும்.

அதனை எளிமைப்படுத்த உயர்கல்வித்துறை முக்கிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அதன்படி, மழை வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் mycertificates.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வவேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்ட மாணவர்கள், மழை வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ் விவகாரங்களை அதில் அளித்து, ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை கொண்டு அந்தந்த மாவட்ட கல்வி நிலையங்கள் (பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்கள்) வாயிலாக சான்றிதழ் நகல் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 959

    0

    0