கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட, நிலையில் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்லக்கூடிய பஸ்,வேன் உள்ளிட்ட பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள் கோவையில் துவங்கியது..
கோவையில் உள்ள வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து,சுமார், 1,200-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களில் இருக்கைகள், அந்த வாகனங்களில் கதவு, புட்போர்டு, ஜன்னல், டிரைவர் கேபின், அவசர வழி, முதலுதவி பெட்டி, தொடர்பு எண், பள்ளி வாகனங்களின் நிறம், குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளதா? மாணவர்கள் ஏறும் வழி, இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா உள்ளிட்ட வசதிகள் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும் வாகன டிரைவர்களின் லைசென்ஸ், வயது விவரம்,பார்வைத்திறன் உள்ளிட்டவை சரியாக உள்ளதா எனவும் பரிசோதனை செய்யப்பட்டன. தொடர்ந்து தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர் நடத்துநர்களுக்கு சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
முன்னதாக இந்த ஆய்வை மாவட்ட ஆட்சியர் சமீரன்,போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன், வட்டார போக்குவரத்து இணை ஆணையர் பொன்.செந்தில் நாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில், போக்குவரத்து வட்டார அலுவலர்கள் சத்தியகுமார்,பாலமுருகன்,சிவகுருநாதன் ஆகியோர் தலைமையில்,கல்வி அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கோவையில் 230 பள்ளிகளை சேர்ந்த 1265 பேருந்துகள் இந்த ஆய்வில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.