தேர்தல் முடிந்ததும் நாங்கள் அடிமைகளா? தேதி அறிவித்ததும் டெல்லியில் பிரதமருக்கு எதிராக போராட்டம்.. அய்யாக்கண்ணு அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2024, 4:51 pm

தேர்தல் முடிந்ததும் நாங்கள் அடிமைகளா? தேதி அறிவித்ததும் டெல்லியில் பிரதமருக்கு எதிராக போராட்டம்.. அய்யாக்கண்ணு அறிவிப்பு!

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திலுள்ள வேளாண் துறை அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் பட்டா மாற்றம் செய்யக்கோரி கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க படாமல் உள்ளது.

விவசாயிகளுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது நிறுத்தி வைக்கப்பட்டது மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மனு அளித்தனர்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த அய்யாக்கண்ணு மோடிக்கு வாக்களிக்க கூடாதென்று விவசாயிகளை ஒன்றினைத்து டெல்லியில் போராட்டம் செய்ய உள்ளதாகவும், தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வாக்கிற்காக தற்போது வருகை புரியவதாகவும், பொய் கூறி மட்டுமே மோடி வாக்கு கேட்டு வருவதாக குற்றஞ்சாட்டினர்.

விவசாயிகளுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் வழங்குவேன் என கூறிவிட்டு வழங்காமல் ஏமாற்றி விட்டதாகவும், நெல் கரும்பிற்கான விலையை உயர்த்துவேன் என வெறும் வார்த்தையால் கூறிவிட்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளின் போராட்டத்தினை மோடி நசுக்கியுள்ளார்.

தேர்தல் தேதி அறிவித்தாலும் டெல்லிக்கு சென்று மோடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவேன் என அய்யாக்கன்னு தெரிவித்துள்ளார். விவசாயிகளை நாட்டின் முதுகெலும்பு என்று கூறும் மோடி தேர்தல் முடிந்தவுடன் விவசாயிகளை அடிமைகள் போல் பார்ப்பதாகவும், காசு கொடுத்து வாக்கு வாங்கலாம், மின்னனு வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு செய்து வாக்கு வாங்கலாம் என மோடி நினைப்பதாக அய்யாக்கண்ணு குற்றஞ்சாட்டியுள்ளார்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!