மது அருந்தும் போது நண்பர்களுக்குள் வாய்த்தகராறு : ஆத்திரத்தில் நண்பனை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்.. நீதிமன்றம் தீர்ப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan6 April 2022, 6:37 pm
விழுப்புரம் : நன்னாட்டில் மதுஅருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பனை தடியால் அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற தலைமை நீதிபதி பூர்ணிமா தீர்ப்பு வழங்கினார்
விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராமத்தை சார்ந்த நண்பர்களான தனசீலன் மற்றும் அஜித் ஆகிய இருவரும் அதே பகுதியிலுள்ள பள்ளியில் அமர்ந்து இரவு நேரங்களில் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுடிருந்துள்ளனர்.
இந்நிலையியில் கடந்த 19.12.2020 ஆம் தேதியன்று இருவரும் பள்ளியில் மது அருந்தும் போது வாய்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். அதன் பின் அங்கிருந்து தனசீலன் புறப்பட்டு வீட்டிற்கு சென்று படுத்து உறங்கியுள்ளார்.
தனசீலன் மீது ஆத்திரம்குறையாத அஜித் நள்ளிரவில் மது போதையில் உறங்கி கொண்டிருந்த தனசீலனின் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே குதித்து தனசீலனை தடியால் தாக்கியும் தலையைண வைத்து அமுக்கி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.
இந்த கொலைவழக்கு குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தனசீலனின் நண்பரான அஜீத்தை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் இவ்வழக்கிற்கான தீர்ப்பினை வழங்கிய நீதிபதி பூர்ணிமா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளி அஜீத்க்கு இரண்டை ஆயுள் தண்டனையை ஏகபோகமாக அனுபவிக்க வேண்டும் எனவும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.