பேருந்து படிக்கட்டில் பயணிக்க பள்ளி மாணவர்கள் இடையே தகராறு : மாணவனை ரவுண்டு கட்டி அடித்த மாணவர்கள்.. ஷாக் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan26 November 2022, 5:02 pm
திருக்கோவிலூர் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதில் தகராறு நீடித்ததால் ஒரு மாணவன் மீது ஒன்பது நபர்கள் தாக்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரப் பகுதியில் உள்ள கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் திருக்கோவிலூர் அருகே உள்ள எடப்பாளையம் மற்றும் எல்ராம்பட்டு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
பிரச்சனையின் காரணமாக ஒரு மாணவன் மீது ஒன்பது மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால் திருக்கோவிலூர் போலீசார் எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்கள் சண்டையிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.