திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் உமாராணி 42. இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில் கோயமுத்தூரில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கோயம்புத்தூரில் பெயிண்டராக வேலை பார்க்கும் சிதம்பரத்தைச் சேர்ந்த கணேசன் 30 என்பவருடன் உமா ராணிக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கணேசனுக்கும் உமாராணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், உமாராணி கோபித்துக் கொண்டு அவரது சொந்த ஊரான தேவநாயக்கன்பட்டிக்கு வந்து விட்டார்.
இதை அறிந்த கணேசன் கோயம்புத்தூரில் இருந்து உமாராணியை பார்க்க தேவநாயக்கன்பட்டி வந்துள்ளார். வந்த இடத்தில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான காளிதாஸ் 27 என்பவரை உமாராணி அழைத்து கணேசனை கோயம்புத்தூருக்கு பஸ் ஏற்றி விடுமாறு கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து காளிதாஸ், கணேசனை வேடசந்தூர் பேருந்து நிலையத்திற்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.
செல்லும் வழியில் இருவரும் பூத்தாம்பட்டி அரசு மதுபான கடையில் மது வாங்கி அருகே உள்ள பகுதியில் அமர்ந்து குடித்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு காளிதாஸ் கணேசனை தாக்கியுள்ளார். இது குறித்து கணேசன், உமாராணிக்கு போன் செய்து கூறியுள்ளார். அதன் பின்னர் உமாராணி ஒரு வாடகை காரில் பூத்தாம்பட்டி அரசு மதுபான கடை அருகே சென்று காரில் உட்கார்ந்தபடி சமாதானம் செய்துள்ளார்.
அப்போது கணேசன் தான் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து காளிதாசின் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காளிதாஸ் காரை விட்டு கீழே இறங்கிய நிலையில் சுருண்டு விழுந்து பலியானார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று காளிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கணேசனை தேடி வருகின்றனர். இளைஞர் ஒருவர் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.