மூச்சு கூட சரியா விட முடியல.. முகவர்கள் குற்றம் சாட்டி தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம்..!

Author: Vignesh
4 June 2024, 10:43 am

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உரிய அடிப்படை வசதிகள் இல்லாததால் முகவர்கள் தேர்தல் அதிகாரிகளுடன்கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் உரிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறியும் அதிகமான 400 க்கும் மேற்பட்ட முகவர்களை சிறிய இடத்தில் அடைத்து வைத்துள்ளதால் மூச்சு விடக் கூட அவதிருவதாகவும் முகவர்கள் குற்றம் சாட்டி தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


உடனடியாக தங்களுக்கு நாற்காலி, மின்விசிறி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தரக் கோரி தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டு வருவதால் சலசலப்பு ஏற்பட்டது.

  • Shiny Sara fraud case ரஜினிக்கு மனைவியா நடிக்க வாங்க…பிரபல நடிகையிடம் மர்ம நபர் மோசடி.!