அரிக்கொம்பன் யானையின் உடல்நிலை பாதிப்பா..? கேரளாவில் இருந்து பதறியடித்து வந்த குழு.. மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு..!!
Author: Babu Lakshmanan14 July 2023, 4:41 pm
குமரி அருகே அரிகொம்பன் யானையின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வரும் நிலையில், கேரளாவை சேர்ந்த அரிசி கொம்பன் யானை ஃபேன்ஸை சேர்ந்தவர்கள் குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டுள்ள அரிக்கொம்பன் யானை உடல்நலம் குறித்து தவறான தகவல்கள் பரவி வருகின்றன. யானையின் உடல் மெலிந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வருகிறது,மேலும் தினசரி யானை குறித்த வெவ்வேறு விதமான தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த வேணுகோபால் என்ற சமூக ஆர்வலர் தலைமையில் அரி கொம்பன், ஃபேன்ஸ் அமைப்பு என்ற பெயரில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:- அரிகொம்பன் யானை குறித்து சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் மிகவும் வேதனை அடைகிறோம். யானை மிகவும் உடல் மெலிந்து ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாக தெரிகிறது, எனவே குமரி மாவட்ட நிர்வாகமும்,தமிழக அரசும் அரி கொம்ப யானை குறித்து சரியான தகவலை தர வேண்டும் என மனு அளித்துள்ளனர்.