தமிழக எல்லைக்குள் புகுந்த ‘அரிசிக்கொம்பன்’ : வைரலாகும் வீடியோ… முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!!
Author: Udayachandran RadhaKrishnan6 May 2023, 3:57 pm
பத்து பேரை பலி வாங்கிய “அரிசிக்கொம்பன்” யானை, தமிழகத்தின் மேகமலையில் மணலார் அணைப்பகுதியில் உலவும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டம் சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதியில் இரவங்கலாருக்கும் மணலாருக்கும் இடையே உள்ள வனப் பகுதியில் “அரிசிக் கொம்பன்” உலாவுவதை பொதுமக்களும், வனத்துறையினரும் நேரில் கண்டதாக என ஸ்ரீவில்லிபுத்தூர் -மேகமலை வன உயிரியல் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கழுத்தில் ரேடியோ காலருடன் “அரிசிக்கொம்பன்” யானை உலவும் காட்சிகள் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவை உறுதி செய்த வனத்துறை பொதுமக்கள் பாதுகாப்பையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையடுத்து மேகமலை, இரவங்கலார், மணலார் பகுதிகளில் பொதுமக்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.