வீட்டில் யாரும் இல்லாத போது காவலர் தூக்குபோட்டு தற்கொலை ; இப்படியொரு பிரச்சனையா..? போலீசார் விசாரணை!!
Author: Babu Lakshmanan3 April 2023, 9:14 am
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உட்கோட்டை அருகே உள்ள தொட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் அரியலூரில் கலால் பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற்று வரும் பாலாஜி, நேற்று முதல் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்ற பாலாஜி, வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து பாலாஜி வெளியே வராததால், அறைக்கு சென்று பார்த்தபோது, அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.