லாரியின் பின்னால் கேட்ட பயங்கர சத்தம்… நிலைகுலைந்து போன கார் ; ரத்த வெள்ளத்தில் சடலமான 4 இளைஞர்கள்..!!!
Author: Babu Lakshmanan7 May 2024, 8:30 pm
அரியலூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரியின் பின்னால் கார் மோதியதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் நகர பகுதியைச் சேர்ந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (24), புவனேஷ் கிருஷ்ணசாமி (18), செல்வா (17), சண்முகம் (23) ஆகிய நான்கு பேரும் அரியலூரில் ஹோம நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பின்னர் தஞ்சாவூர் நோக்கி காரில் பயணம் செய்தனர்.
அப்போது, ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது கார் கட்டுபாட்டை இழந்து லாரியின் பின்னால் மோதியதில் இந்த நான்கு பேரும் சம்பவ பலியானார்கள். இவர்கள் நான்கு பேரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கழுத்தில் இறுக்கப்பட்ட கம்பி… ஜெயக்குமார் தனசிங் திட்டமிட்டே கொலை… பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்..!
சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் நேரில் சென்று பார்வையிட்டு பின்னர் நான்கு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.