மாணவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் … மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்த மைக்கேல்பட்டி கிராம மக்கள்…!!

Author: Babu Lakshmanan
28 January 2022, 3:51 pm

மதமாற்றம் செய்யக்கோரி நெருக்கடி கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக கிராம மக்கள் புகார் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

அரியலூர் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் என்பது தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் மாணவி படித்த பள்ளிக்கூடம் உள்ள மைக்கேல்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :- எங்கள் கிராமத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதாகவும், எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. இது வரை இப்பகுதியில் மதமாற்றம் என்கிற பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால் இதை சிலபேர் தவறாக பரப்பி வருகின்றனர். மேலும், எங்களை ஒரு தரப்பினருக்கு ஆதரவாக பேச சொல்லி சிலர் நிர்பந்தம் செய்வதாகவும், இப்பிரச்சினை தொடர்பாக யாரும் எங்கள் பகுதி வரக்கூடாது அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

  • a temple built for samantha in andhra pradesh திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?