தமிழகத்தில் விரைவில் காமராஜரின் தேசிய ஆட்சியை பாஜக அமைக்கும் : அர்ஜுன் சம்பத் நம்பிக்கை

Author: Babu Lakshmanan
26 July 2022, 10:02 pm

விருதுநகர் : விரைவில் காமராஜரின் தேசிய ஆட்சியை தமிழகத்தில் பாஜக கொடுக்கும் என்று மக்கள் கட்சி தலைவர் ஆர்ஜூன் சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டு பவளவிழாவை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் இடங்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் வந்தே மாதர யாத்திரை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு இல்லத்திற்கு, இந்து மக்கள் கட்சி தலைவர் ஆர்ஜூன் சம்பத் சென்று காமராஜரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் ஆர்ஜூன் சம்பத், விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியை மையமாக வைத்து பட்டாசு தொழில் வாழ்வாதாரமாக உள்ளது. சமீபத்தில் பட்டாசு தொழிலில் ஏற்பட்டு வரும் விபத்துக்கள் புதியாக கொண்டு வரப்பட்ட சட்டங்களால் பட்டாசு தொழில் நசிந்து விட்டது. இதற்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

மேலும், பேசிய அவர், வருவாய்த்துறை ஆஅமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில் தட்டுவது, அவரது மேட்டுமை மனப்பான்மையை காட்டுகிறது, என குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்தில் காமராஜரின் தேசிய ஆட்சியை பாஜக விரைவில் அமைக்கும் என தெரிவித்தார்.

  • expecting good bad ugly movie collection will overtake jailer movie collection ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?