75 தொகுதிக்கு 1 மாநிலமா? அர்ஜுன் சம்பத் கோரும் தமிழகம்

Author: Hariharasudhan
25 November 2024, 2:25 pm

75 தொகுதிக்கு ஒரு மாநிலம் என தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என இந்து மக்கள் நீதி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இந்து மக்கள் கட்சி சார்பில் இந்து எழுச்சி மாநாடு மற்றும் பட்டாசு வரிக் குறைப்பு மற்றும் சீன சிகார் லைட்டர்களுக்கு தடை விதிக்கக் காரணமாக இருந்ததாக பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசனுக்கு பாராட்டு விழா ஆகியவை நேற்று (நவ.24) இரவு நடைபெற்றது. இதனையடுத்து, அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், ” தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவை பெருக வேண்டும். அதுமட்டுமல்லாமல், நிர்வாகம், வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தென் தமிழகம் மற்றும் கொங்கு பகுதியை மையமாகக் கொண்டு, 75 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாநிலம் என தமிழகத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும்.

மேலும், புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் கூட திராவிடம் தான் பேசுகிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் பாஜக அல்லாத கட்சிகளுக்கு இடையே மட்டும் தான் போட்டி. குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசாருக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது.

அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்கு உள்ளது. மக்களை திசை திருப்பவே மத்திய அரசு மீதான எதிர்ப்பை திமுக பயன்படுத்துகிறது. இந்து அமைப்புகளுக்கு எதிரான வழக்குகள் மற்றும் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை சட்டரீதியாக எதிர்கொள்ள, சனாதன ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டம் வருகிற டிசம்பர் 8ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கிறது.

இதையும் படிங்க: வீணாப் போன வேலையை செஞ்சிட்டேன் : நாக சைதன்யா பற்றி சமந்தா பதில்!

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கழுத்தில் சிலுவையை அணிந்து கொண்டு ஐயப்பனை இழிவுபடுத்திய பாடகி இசைவானி மற்றும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் மீது தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்படும். இதன்படி அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 118

    0

    0