பாக். பயங்கரவாதிகளோடு சேர்ந்து தமிழகத்திலும் மத வெறி அமைப்புகளை துாண்டி விடுவதற்கான முயற்சி நடப்பதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில், 3கோரிக்கை மனுக்களை கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது :- அனைத்து கோவில்களிலும் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட வேண்டும், என்பது பொதுவான கோரிக்கை. உலக புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில், சுவாமி தரிசனம், வாகன நிறுத்தக் கட்டணம், சுங்கக் கட்டணம் என பல வழிகளில் வருவாய் உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அந்தப்பகுதியில் இருக்கும் மக்களுக்கும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சமயபுரம் பகுதி மக்களுக்கு, கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
சமயபுரம் பகுதி மக்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம் நடத்தி உள்ளனர். உள்ளாட்சி நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளூர் மக்களுக்கு கட்டண வசூல் முறையை ரத்து செய்ய வேண்டும். கோவிலுக்கு அருகில் மதுக்கடைகள், அதன் அருகிலேயே வணிக நிறுவனங்கள் போன்றவை உள்ளன. அது போன்ற மதுக்கடைகளை மூட வேண்டும். திருச்சி நீதிமன்ற வளாகத்தில் 100 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோவில், ஒரு வாரமாக பூட்டிக்கிடக்கிறது.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்கக் கட்டிடத்தில் திராவிட மற்றும் கம்யூனிஸ்ட் நக்சல் வக்கீல்கள் பிரியாணி விருந்து நடத்த அனுமதிக்காததால், விநாயகர் கோவிலை பூட்டி வைத்துள்ளனர். இதனால், பக்தர்கள் மனம் புண்படுகிறது. அதை திறந்து வழிபட வைக்க வேண்டும்.
காவிரி ஆணையம், நீதிமன்ற உத்தரவை அவமதித்து, காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் வலியுறுத்தி, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து, வரும் 13ம் தேதி அறப்போராட்டம் நடத்தப்படும். பா.ஜ கட்சி தான் தி.மு.க.,வின் லஞ்ச ஊழலை அம்பலப்படுத்தி, பொய் வழக்கு எதிர்கொண்டு, தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறது.
தி.மு.கவையும் அ.தி.மு.க.,வையும் வேண்டாம் என்று நினைப்பவர்கள், லஞ்ச ஊழலை எதிர்ப்பவர்கள் அணி திரண்டு வருகின்றனர். இந்த அரசியல் மாற்றத்துக்கு, ஹிந்து மக்கள் கட்சி துணை நிற்கும். அல்.உம்மா, பாகிஸ்தான் ஆதரவாளர்கள், கம்யூ., மற்றும் திராவிட இயக்கத்தினர், ஹமாஸ் இயக்கத்தை ஆதரித்து வருகின்றனர். இதை மத்திய உளவுத்துறை கண்காணிக்க வேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள மத அடிப்படைவாத அமைப்புக்கள் இஸ்ரேலிய மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கி இருக்கின்றனர். இந்தியா, அமெரிக்கா போன்றவை இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன. பாலஸ்தீன பயங்கரவாதிகள் தான் உலகம் முழுவதும் இருக்கும் பாக்., பயங்கரவாதிகளோடு சேர்ந்து, தமிழகத்திலும் மத வெறி அமைப்புகளை தூண்டி விடுவதற்கான முயற்சி நடக்கிறது. இதை உளவுத்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க., பழனிச்சாமி ஆட்சியில், தி.மு.கவிடம் பணம் வாங்கிக் கொண்டு இருந்த விவசாயிகள், இப்போது, சாராய ஆட்சியில் ஸ்டாலின் வீட்டையும், சித்தராமைய்யா வீட்டையும் முற்றுகையிட வேண்டும் என தெரிவித்தார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.