சைவ உணவகத்தில் சிக்கன் கேட்டு தகராறு.. ஓட்டல் ஊழியர்களை தாக்கிய காவலர்கள்: வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
17 February 2023, 3:56 pm

செங்கல்பட்டு : தாம்பரம் அருகே சைவ உணவக்கத்திற்கு சென்று அசைவ உணவு கேட்டு கைகலப்பில் ஆயுதப்படை காவலர்கள் ஈடுபட்ட சம்பவம் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியில் உள்ள அர்ச்சனா பவன் உணவகத்தில் நேற்று இரவு தாம்பரம் ஆயுதப்படையை சேர்ந்த காவலர்கள் இரண்டு பேர் மப்டியில் சாப்பிடுவதற்காக மது போதையில் சென்றதாக கூறப்படுகிறது.

சைவ உணவகத்தில் தங்களுக்கு சிக்கன் பிரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதற்கு அங்கிருந்த ஊழியர்கள் இது சைவ உணவகம், இங்கு அசைவம் கிடையாது என்று கூறியுள்ளனர். இருந்தாலும் தங்களுக்கு ஃபிரைட் ரைஸ் வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆயுதப்படை போலீசாருக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதில், இருதரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டுள்ளனர். சம்பவம் குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட இருவரிடமும் சேலையூர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!