வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியிடம் ஆஜரான ஆயுதப்படை பயிற்சி காவலர் . விசிக திடீர் எதிர்ப்பு : போலீசார் குவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2024, 2:14 pm

வேங்கை வயல் விவகாரத்தில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜா இன்று சிபிசிஐடி விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள சி பி சி ஐ டி அலுவலகத்தில்

வேங்கை வயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே 189 நபர்களிடம் விசாரணை செய்து வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்

மேலும் 31 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை எடுத்ததில் குடிநீர் மாதிரி சோதனை முடிவோடு டி என் ஏ ஒத்துப் போகாததால் சிபிஎஸ்சி டி போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் சி பி சி ஐ டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இதற்கிடையில் அதே ஊரைச் சேர்ந்த புதுக்கோட்டை ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜாவின் செல்போன் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு முரளி ராஜாவிடம் குரல் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது.

அதேபோன்று அந்த செல்போன் பதிவை ஆதாரத்தை கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று நபர்களிடம் சென்னையில் உள்ள குரல் மாதிரி பரிசோதனை மையத்தில் சிபிசிஐ போலீசார் குரல் மாதிரி பரிசோதனை எடுத்துள்ளனர்

இதற்கிடையில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜாவை இன்று நிஜாம் காலனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகமாறு சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்றுஅவர் புதுக்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக தனது வழக்கறிஞருடன் ஆஜரானார்.

இந்த நிலையில் நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல் இதர சமூக வலைதளங்களில் அவர்கள் சார்பாக ஒரு பதிவு ஒன்று பதிவு செய்யப்பட்டு உலா வருகின்றது.

அதில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜாவை குற்றவாளியாக ஆக்க முயற்சித்து பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக ஆக்க சிபிசிஐடி போலீசார் முயற்சி செய்கின்றனர். இதனை நாம் முறியடிக்க வேண்டும் என்பது போன்ற வாசகங்களை பதிவிட்டு உள்ளதோடு நாளை காலை நாம் 10 மணிக்கு அனைவரும் முரளி ராஜாவிற்காக ஒன்று கூட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது

விடுதலை சிறுத்தைகளின் சமூக வலைதளங்களில் வெளியிட்ட அறிக்கையால் நகரம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: கோவிலில் திருட்டு போன நகை.. ஒரு வாரம் கழித்து அதே இடத்தில் வைத்து சென்ற திருடர்களால் பரபரப்பு!

இந்நிலையில் இன்றைய காலை 10 மணி அளவில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜா சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். சி பி சி ஐ டி போலீசார் காவலர் முரளி ராஜாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 557

    0

    0