மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்…கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்: ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்..!!

Author: Rajesh
4 April 2022, 2:01 pm

தஞ்சாவூர்: மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

மேலும், தேங்காய்க்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்தல், சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உடனடியாக வழங்குதல், தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு நெல்லுக்கு குவிண்டால் 1க்கு ரூ.2500ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்க வேண்டும்.

ஆற்றில் மணல் எடுப்பதையும், குவாரிகள் அமைப்பதையும் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டத் தலைவர் குருநாதன், மாநில செயலாளர் மகேந்திரன், துணைப்பொதுச்செயலாளர் தங்கமுத்து, மாநில செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் விவசாயிகள் மண்டை ஓட்டுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!