ஆம்ஸ்டிராங் படுகொலை… வெளியான ஷாக் சிசிடிவி : விபரத்துடன் வெளியிட்ட காவல்துறை!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2024, 1:58 pm

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிசிடிவி காட்சி உள்ளது.அவரது வீடு கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் தெரு பைக் செல்லும் அளவில் குறுகிய வழியாக உள்ளது.

அந்த தெருவில் முதலில் ஒரு பைக்கில் தனி ஆளாக ஒருவர் அவரை நோட்டமிடுகிறார். பின்னர் இன்னொரு பைக்கில் மற்றொருவர் வருகிறார். இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் மற்றொரு பைக்கில் இரண்டு பேர் அந்த இடத்திற்கு வருகிறார்.

அனைவரும் வந்ததும் ஆம்ஸ்ட்ராங்கை தாக்க ஆரமித்தனர். ஆம்ஸ்ட்ராங் கூட இருந்தவர்கள் அவரை தாக்கியதை பார்த்து பின்னோக்கி சென்றனர்.

ஒருவர் ஆம்ஸ்ட்ராங்கை நோக்கி காப்பாற்ற வரும் போது சொமேட்டோ டி சர்ட் அணிந்த ஒருவர் அவரை துரத்த ஆரமித்தார். உடனே அவர் பின்னோக்கி ஓடினார். வேறு யாரும் அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் இருக்க இன்னும் 3 பேர் சுற்றி இருந்த தொழிலார்களை ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம்: அதிர்ச்சி வீடியோ வெளியீடுவிரட்டி அடித்தனர்.

பின்னர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த வீடியோ தற்போது வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!