ஆம்ஸ்டிராங் படுகொலை… நீதிமன்றத்தில் வழக்கு : இயக்குநர் வெற்றிமாறன் சொன்ன உருக்கமான விஷயம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2024, 10:50 am

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மற்றும் எம்பாமிங் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீட்டில் அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு சிறிது நேரம் வைக்கப்பட்டு குடும்ப சடங்குகள் செய்யப்பட்டது.

இதன்பின், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஆம்ஸ்ட்ராங் உடல் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது,ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை வன்மையாக கண்டிக்கதக்கது. அவர் பல்வேறு இளைஞர்களுக்கு கல்விக்கு பெரும் உதவி செய்து இருக்கிறார்.

அவர் உதவியால் படித்து பல்வேறு துறைகளில் இளைஞர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவரை ரோல் மாடலாக வைத்து இன்னும் பல இளைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பு அவரை சார்ந்து உள்ளவர்களுக்கு மாபெரும் இழப்பு. ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அரசு அனுமதிக்காததை அடுத்து நீதிமன்றத்தை அணுகி இருப்பது நல்ல முடிவு என்று கருதுகிறேன். சரியாக தீர்ப்பு வரும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்