ஆம்ஸ்டிராங் கொலை வழக்கை பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் : செ.கு தமிழரசன் யோசனை!
Author: Udayachandran RadhaKrishnan20 July 2024, 12:50 pm
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டி கடந்த 11.07.2024 அன்று உயிரிழந்தார் இந்நிலையில் இவரது உயிரிழப்புக்கு ஆறுதல் தெரிவிப்பதற்க்காக இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் இன்று காட்பாடி விருதம்பட்டு காந்தி நகரில் உள்ள சேகர் ரெட்டி வீட்டிற்க்கு சென்று உயிரிழந்தவரின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
செய்தியாளர்களை சந்தித்த செ.கு.தமிழரசன் கூறுகையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல கட்சி நிர்வாகிகள் பிடிபட்டுள்ளனர் மேலும் பாஜகவில் ரௌடிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தஞ்சம் அடைகின்றனர் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் உள்ளது தற்போது காவல்துறை விசாரணையில் உள்ளது விசாரணையில் நான் குறிக்க விரும்பவில்லை மாநில விசாரணை சிபிசிஐடி விசாரணை சில தலைவர்கள் சிபிஐ கேட்கின்றனர்.
ஆகவே இந்த இரு வேறு கருத்துகளும் ஆர்ம்ஸ்டாங் மரணத்திற்கான நியாயத்தை தேடி தருமா ஏனென்றால் இது அரசியல் ஆக்கப்படுகிறது எங்களைப் போன்றவருடைய கருத்து பொறுப்பிலே இருக்கின்ற ஒரு நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தப்பட வேண்டும் அந்த விசாரணை பாரபட்சம் இன்றி நடக்க வேண்டும் இதுதான் எங்களை போன்றவருடைய கருத்து எனவே பொறுப்பில இருக்கின்ற பதவியில் இருக்கின்ற ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி உருவாக்கப்பட்டால் பாரபட்சம் இன்றி நீதியும் நியாமும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கிடைக்கும்
ஆம்ஸ்டாங் படுகொலை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியை நிர்வாகி படுகொலை செய்யப்பட்டுள்ள புதிதாக பொறுப்பேற்ற அருண் எப்படி செயல்படுவார் தமிழகத்தில் சட்டமூலங்கு எப்படி உள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டுள்ளது வேதனைக்குரியது கண்டனத்திற்குரியது ஆனால் அது சென்னையில் அல்ல புதிதாக பொறுப்பேற்று இருக்கிறவர் சென்னை ஆனையர் ஆனால் ஏடிஜிபி யாகவும் சட்டம் ஒழுங்கில் புதிதாக தான் பதவி ஏற்றுள்ளார் என கேட்டதற்கு அவர் இப்பொழுது தான் வந்துள்ளார் அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை .
அது திருச்சியில் நடந்தது பொதுவாகவே கடந்த மூன்று ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் சமூகப் பொறுப்பாளர்கள் அரசியல் கட்சி நிர்வாகிகள் என கொலை செய்யப்பட்டுள்ளனர் படுகொலை நடப்பது நாளும் தொடர்கின்ற தொடர்கதை ஆகிவிட்டது சட்டம் ஒழுங்கு என்பது ஒரு கேள்வி குறிதான் அது சீர்குலைந்து உள்ளது என்பதை சாதாரண குடிமகன் கூட உணர்ந்துள்ளான் ஆகையால் அதில் தீவிரம் காட்ட வேண்டும் தமிழக அரசு கடந்த அரசை குறை கூறிக் கொண்டிருக்கிற திமுக அரசின் கையாலாகாத தனமா அல்லது அவர்களுக்கு அக்கறை இல்லையா என்ன காரணம் என்று அவர்கள் தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் இது போன்ற படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருப்பது மக்களுக்கு நல்லதல்ல
முதல்வர் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது பிறகு ஏன் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு
நீங்கள் கூறும் கருத்திற்கு நான் மாறுபடுகிறேன் அவர் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான் ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் காலகட்டத்தில் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போல அந்தத் தொடர்பு இன்று இதே நிகழவில்லை காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை கேள்விக்குறிதான் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறது என்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஓரளவிற்காவது பராமரிக்கப்படும்.
தலித் மக்களுக்காக போராடும் அவர்களுக்காகவே உடைத்துக் கொண்டிருக்கும் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பது இன்று அவசியத்திற்கு உரியதான ஒன்றாகும்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதலில் குரல் கொடுத்த திருமாவளவன் பிறகு அமைதியாகிவிட்டார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு
அவர் இங்கு உள்ளாரா அல்லது வெளியூர் எங்கேயும் சென்றுள்ளாரா மீண்டும் உங்களைப் போன்ற செய்தியாளர்கள் திருமாவளவனிடம் கேட்டு விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டும் ஏன் இந்த சூழலில் அவர் மீண்டும் குரல் கொடுக்காமல் உள்ளார் இல்லை அவர் வேறு ஏதேனும் பணியில் கூட இருக்கலாம் எனக்கு தெரியவில்லை செய்தியாளர்கள் நீங்கள் கேட்டு சொன்னால் தெரிந்து கொள்வேன்.
தமிழக சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என எடப்பாடி கூறியுள்ளார் என கேட்டதற்கு
யார் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் துணைத் தலைவரா ஏற்கனவே இருப்பவர் துணைத் தலைவரா இந்த சர்ச்சைக்கு கூட முடிவெடுக்க முடியாத சபாநாயகர் ஓராண்டு காலமாக இழுத்துக் கொண்டே இருக்கிறார் என்றால் எதிர்க்கட்சித் தலைவர் சந்தேகம் எடுப்பதிலே என்ன தவறு? அவருடைய கேள்வியும் சந்தேகமும் நியாயமானது என கூறினார்