ராணுவ வீரரை திமுக கவுன்சிலர் அடித்து கொன்ற சம்பவம் : விசாரணையை தொடங்கியது 5 பேர் கொண்ட ராணுவ குழு !!
Author: Babu Lakshmanan18 February 2023, 6:11 pm
வேலம்பட்டியில் ராணுவ வீரர் கொலை தொடர்பாக மத்திய ராணுவ போலீஸ் கர்னல் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு நேரில் விசாரணை மேற்கொண்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து வேலம்பட்டி கிராமத்தில் ராணுவ வீரர் பிரபு திமுக கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்களால் அடித்து கொல்லப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராணுவ வீரர் பிரபுவின் வீட்டிற்கு வருகை தந்த SP RANK கர்னல் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட மத்திய ராணுவ போலீஸ் குழு, உயிரிழந்த பிரபுவின் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின்னர், காயம் அடைந்த அவரது அண்ணன் பிரபாகரனிடம் நடந்த சம்பவம் குறித்து மத்திய ராணுவ போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் உயிரிழந்த ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.