30 அடி உயரத்தில் இருந்து விழுந்த லைட்மேன் ; பட சூட்டிங்கின் போது நிகழ்ந்த சோகம் : சிக்கலில் ஏஆர் ரகுமான்..!!

Author: Babu Lakshmanan
18 January 2023, 5:01 pm

திருவள்ளூர் : கவரைபேட்டை அருகே சினிமா சூட்டிங்கின் போது 30 அடி உயரத்தில் இருந்து லைட்மேன் தவறி விழுந்து உயிரிழந்த சோகம் படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

திருவள்ளூர் மாவட்டம் கவரைபேட்டை அருகேயுள்ள ஐயர் கண்டிகை கிராமத்தில்
திரைப்பட இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானுக்கு சொந்தமான பிலிம்சிட்டி ஸ்டுடியோவில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் வெப்பன் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, ஒலிப்பதிவு அரங்கத்தில் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த குமார் (47) என்பவர் லைட் மேனாக பணிபுரிந்து வந்தார். அங்கு திரைப்படத்திற்காக நடைபெற்ற பணியின் போது, சுமார் 30 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில், பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த கவரைபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திரைப்பட நடிகர் சத்தியராஜ் நடிக்கும் வெப்பன் திரைப்படத்திற்கான பணியின் போது லைட்மேன் தவறி விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து தொடர்பாக அங்கு அவருடன் பணியில் இருந்த ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?