இறுதி அஞ்சலிக்காக இரவோடு இரவாக நடக்கும் ஏற்பாடு.. விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு!
மறைந்த விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். விஜயகாந்தின் உடல் நாளை மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், நாளை மாலை 4.30 மணியளவில் தேமுதிக அலுவகத்தில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்த ஏராளமான பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், இட நெருக்கடி காரணமாக, அதிகமானோர் அஞ்சலி செலுத்துவதில் சிரமம் உள்ளதன் காரணமாகவும், மேலும் ஏராளமானோர் விஜயகாந்த் உடலை கடைசியாக ஒருமுறை பார்ப்பதற்காக வருகை தருவதன் காரணமாகவும், பாதுகாப்பு கருதி, சென்னை தீவுத் திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை வைக்கப்படுகிறது.
விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, அண்ணா சாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது.
விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து மதியம் 1 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என தேமுதிக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக விஜயகாந்த் உடல் வைக்கப்படவுள்ள தீவுத்திடலில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளை அதிகாலையில் கோயம்பேட்டில் இருந்து விஜயகாந்த்தின் உடல் தீவுத் திடலுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர்.…
யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல என நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான்…
This website uses cookies.