எங்க தலைவரை பத்தி அவரு எப்படி அப்படி பேசலாம்… ஹெச்.ராஜாவை கைது செய்யுங்க : உருவபொம்மையை எரித்து விசிகவினர் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2022, 3:21 pm

பழனி : பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் உருவபொம்மையை விடுதலை சிறுத்தை கட்சியினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பாக இடும்பன் குளத்தில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நேற்று நடைபெறுவதாக இருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து, அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்த பாஜக மூத்ததலைவர் ஹெச்.ராஜாவை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அப்போது பேசிய ஹெச்.ராஜா, டெல்லியில் இருந்து கொண்டே தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களை கொழுத்துவேன் என்று பேசிய விசிக தலைவர் திருமாவளவனை எல்லாம் கைது செய்யாத போலீசார் தன்னை கைது செய்வதாகக் கூறினார்.

இதனை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசிய பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து பழனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பழனி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருமாவளவனை பற்றி அவதூறு பேசிய ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஹெச்.ராஜாவின் உருவப்படத்தை தீயிட்டுக் கொளுத்தினர்.

தொடர்ந்து பல்வேறு கண்டன கோஷங்களும் எழுப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எரிக்கப்பட்ட உருவபொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆர்ப்பாட்டம் செய்த விசிக கட்சி தொண்டர்கள் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 738

    0

    0