முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கைது : அதிமுகவினர் கொந்தளிப்பு.. மதுரையில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2024, 6:25 pm

முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கைது : அதிமுகவினர் கொந்தளிப்பு.. மதுரையில் பரபரப்பு!

மதுரை திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி தாலுகா கே. சென்னம்பட்டியில் தனியார் உரத் தொழிற்சாலை கழிவுகள் வெளியேறுவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் மேலும் கழிவுகளால் இப்பகுதியில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்வளம், நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், இந்த உரத் தொழிற்சாலையை மூடக்கோரி கே. சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம், ஆவல் சூரன்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து வாக்கை பதிவு செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஐந்து கிராமங்களிலும் சேர்த்து மொத்தம் 5050 வாக்குகள் உள்ள நிலையில் நடைபெற்ற தேர்தலில் 167 வாக்குகள் மட்டுமே பதிவானது.

இந்த சர்ச்சைக்குரிய தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் ஏற்கனவே மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இதற்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து முடிவுகள் வரும் வரை தற்காலிகமாக தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

p> மேலும் படிக்க: பிரச்சார மேடையில் பேசும் போது மயங்கி விழுந்த நிதின் கட்கரி : மருத்துவமனையில் அனுமதி.. ஷாக் VIDEO!

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல பொறியாளர் குணசேகரன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டதில் வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக தொழிற்சாலை பின்பற்றுவதாக பதில் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து தொழிற்சாலை மீண்டும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விருதுநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடி சந்திப்பில் பொதுமக்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 300

    0

    0