அதிர வைத்த ‘ஆபரேஷன் அகழி’ : கைதான பாஜக கூட்டணி கட்சி பிரமுகர்.. சோதனையில் ஷாக்.. கட்சியினர் மறியல்!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2024, 6:38 pm

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் ஆபரேஷன் அகழி மூலமாக பல்வேறு குற்ற வழக்கில் ஈடுபட்ட, தேடப்பட்டு வந்த ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

இதுவரை பல்வேறு கட்சிகளை சேர்ந்த நபர்களையும் கைது செய்துள்ளார். நேற்று தலைமறைவாக இருந்த ஐ ஜே கே கட்சியை சேர்ந்த நிர்வாகி பட்டறை சுரேஷ் காவல்துறையினர் கைது செய்தும், அவரது வீட்டில் இருந்து கட்ட பஞ்சாயத்தின் மூலம் பெறப்பட்டதாக கூறப்பட்ட 62 சொத்து பத்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதை தொடர்ந்து அக்னி ஆபரேஷன் மூலமாக இன்று திருச்சி மாவட்டம் ராம்ஜிநகரில் உள்ள கொத்தமங்கலம் காலனி பகுதியில் தமிழர் தேசம் கட்சியின் மாநில தலைவர் K.K.செல்லகுமார் வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: லட்டுக்கு சோதனை மேல் சோதனை.. குட்காவை தொடர்ந்து பிரசாதத்தில் இருந்த எலி!

ஆனால் சோதனையில் எதுவும் சிக்காததால் அங்கு ஒன்றுமில்லை என்று காவல்துறையினர் திரும்பினார். இதனை கேள்விப்பட்ட கட்சியின் தொண்டர்கள் திடீரென திருச்சி திண்டுக்கல் தேசிய சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து காவல்துறை அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் சாலை மறியலை கைவிட்டனர்.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!