மூதாட்டியிடம் தாலியை பறித்து கொண்டு தப்பியோடிய திருடன் : துரத்தி சென்று பிடித்த பொதுமக்கள்…

Author: kavin kumar
5 February 2022, 5:59 pm

புதுச்சேரி : புதுச்சேரியில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த மூதாட்டியிடம் தாலி செயினை பறித்து சென்ற திருடனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

புதுச்சேரி பங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி (60). இவர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தபோது, அதிகாலை நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், செல்வராணி கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதில் எழுந்த செல்வராணி அலறியுள்ளார். இவரது சத்தம் பேட்டு வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். இதையறிந்த அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

அவரை பொதுமக்கள் பிடித்து வில்லியனூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து செல்வராணியின் மகன் ராமஜெயம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பதும், இரவு நேரத்தில் வீடு புகுந்து திருடி வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து பாலகிருஷ்ணனை போலீசார் நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!