கைதாகிறார் ஓபிஎஸ் மகன்? சிறுத்தை உயிரிழந்த வழக்கில் சிக்கும் ரவீந்திரநாத் எம்பி… திமுகவின் தங்கத்தமிழ் செல்வன் திடீர் புகாரால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan14 October 2022, 2:10 pm
தேனி : பெரியகுளம் அருகே கைலாசபபட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் சமீபத்தில் சிறுத்தை இறந்த வழக்கில் தோட்டத்தின் உரிமையாளர் ஓபி ரவீந்திரநாத் மீதும் வழக்கு பதிவு செய்யக்கோரி திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ் செல்வன் வனத்துறை அதிகாரியிடம் மனு அளித்தார்.
தேனி மாவட்டம் தேனி கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் சொர்க்கம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மூத்த மகன் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் சோலார் வேளியில் சிறுத்தை சிக்கி உயிரிழந்தது.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில் ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆடு கிடை அமர்த்தி இருந்த அலெக்ஸ் பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து தோட்டத்தின் மேலாளர் தங்கவேல், ராஜவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டு மூன்று பேருர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்து உள்ளது.
அதனால் சிறுத்தை உயிரிழப்பிற்கு தோட்ட உரிமையாளரும் காரணம் எனக் கூறி தோட்டத்தின் உரிமையாளர் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தேனி திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று வனத்துறை அதிகாரி சமர்தாவிடம் புகார் மனுஒன்றை அளித்து தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்