சப்பாத்தியில் கருணநிதியின் உருவம்… நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஓவியத்தை வரைந்து அசத்திய ஓவியக் கலைஞர்.!!

Author: Babu Lakshmanan
4 August 2023, 11:07 am

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சப்பாத்தியில் அவரது ஓவியத்தை வரைந்து ஓவியக் கலைஞர் அசத்தியுள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதி யின் 100வது பிறந்த நாளை ஒட்டி கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரசு சார்பிலும் திமுக கட்சியின் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற கலைஞர் சப்பாத்தியில் கலைஞர் கருணாநிதியின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார். ஒரு சிறிய அளவிலான இரும்பு கம்பியை நெருப்பில் காய்ச்சி அதன் மூலம் சப்பாத்தியில் கலைஞரின் ஓவியத்தை வரைந்துள்ளார். இதனை செய்வதற்கு சுமார் 3 மணி நேரமாகியதாக அவர் கூறியுள்ளார். அவர் வரைந்த ஓவியத்தில் கலைஞர் மு.கருணாநிதியின் முகமும், அதன் கீழ் “கலைஞர் 100” என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது.

இவர் இதற்கு முன்னதாகவே பல்வேறு மைக்ரோ ஆர்ட்டுகளை (Micro Art) தங்கத்தில் செய்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?
  • Close menu