‘தலைவர் 170’- ரஜினிக்கு வில்லனாகும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்: 30-வருடங்களுக்கு பிறகு இணையும் கூட்டணி..!

Author: Vignesh
27 September 2022, 7:45 pm

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார்.

அந்த வகையில் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் முடியும் முன்பே ரஜினியின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவ தொடங்கிவிட்டன.

அதன்படி ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என்றும் அப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் என்றும் தகவல்கள் பரவின.

இதற்கிடையே அப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கவிருப்பதாகவும், அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். தற்போது கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைய இருக்கின்றனர். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 506

    0

    0