சூப்பர் ஸ்டாரின் தம்பியை குறி வைத்த இயக்குநர் வெங்கட் பிரபு: மீண்டும் ஸ்டைலிஷ் வில்லனாக அவதாரம் எடுக்கும் நடிகர்..!
Author: Vignesh29 September 2022, 7:30 pm
வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கும் புதிய படத்தில் இணைந்த அரவிந்த்சாமி
அரவிந்த் சாமி.
அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் யானிக் பெண் பணியாற்றி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் புதிய தெலுங்கு படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சென்னை-28 திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த வெங்கட் பிரபு, சமீபத்தில் மாநாடு, மன்மத லீலை உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.
தமிழில் பிசியாக திரைப்படங்களை இயக்கி வந்த வெங்கட் பிரபு, தற்போது தெலுங்கில் முதன்முறையாக புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் யானிக் பெண் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக அருண் விஜய் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லையாம். அவருக்கு பதிலாக பிரபல நடிகர் அரவிந்த்சாமி இப்படத்தில் வில்லனாக இணைந்துள்ளாராம்.
மேலும், அரவிந்த்சாமி ரஜினியின் அடுத்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். தற்போது கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைய இருக்கின்றனர். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.