அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan1 April 2025, 7:59 pm
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க பிளான் போட்டது.
முதலில் அதிமுக மறுப்பு தெரிவித்தாலும், சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசியது அரசியலில் புயலை கிளப்பியது. பாஜகவுடன் கூட்டணியே வைக்கமாட்டோம் என பேசிய அதிமுக முக்கிய தலைவர்கள் தற்போத கப்சிப் என சைலண்ட் ஆகியுள்ளனர்.
அதிமுகவுடன் கூட்டணி உறுதி என இபிஎஸ் சந்தித்த அன்றே இரவு அமித்ஷா சொல்லாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிவிட்டார். ஆனால் அதிமுக இனியும் ஒப்புக்கொள்ளவில்லை.
இதனிடையே தான், அமித்ஷாவிடம் இபிஎஸ் முக்கிய நிபந்தனைகளை விதித்ததாகவும், அதில் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!
இதனால் அடுத்த பாஜக தலைவர் நயினார நாகேந்திரன் என்ற தகவலும் பரவி வருகிறது. இந்த நிலையில், 2021 தேர்தலில் தோல்விக்கு பிறகு பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்ததில் இருந்தே அண்ணாமலை அதிமுகவையும், அக்கட்சி தலைவர்களையும் விமர்சித்து வருகிறார்.
மேலும் அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணி போட்டால், நான் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என முன்னரே தெரிவித்திருந்தார்.
இதனால் அண்ணாமலையும் தற்போது தலைவர் பதவியை துறக்க தயாராகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே டெல்லி சென்ற அண்ணாமலை, முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க கூடாது என்றும், அப்படி செய்தால் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியடையும் என அமித்ஷாவிடம் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.
இது குறித்த செய்திகள் நாளிதழ்களில் வெளியாகி இருந்த நிலையில், குறிப்பிட்ட நாளிதழின் செய்தியை தனது X தளத்தில் பதிவிட்டு அண்ணாமலையை விமர்சித்துள்ளார் முன்னாள் பாஜக நிர்வாகியும், நடிகருமான எஸ்வி சேகர்.
அவர் பதிவில், ஒரு கவுன்சிலராக கூட ஆக துப்பு இல்லாத ஒருத்தர் முதலமைச்சரா 1.5 கோடி உருப்பினர் உள்ள கட்சியையும், EPSஐயும் கணிக்கிறாரம். அண்ணாமலை இருக்கிற வரைக்கும் டிரம்ப் புதின் கூட்டணிக்குள்ள வந்தாலும் ரிசல்ட் பூஜ்ஜியம்தான். வாஷ் அவுட் 2026. தன் தனிப்பட்ட பகையை கட்சியின் மூலம் தீர்க்கறாரம் என விமர்சித்துள்ளார்.