யார்ரா அந்த பையன்..மிரண்டு போன லக்னோ டீம்..அசத்திய டெல்லி ஹீரோ.!
Author: Selvan25 March 2025, 12:57 pm
அசுதோஷ் சர்மா யார்?
ஐபிஎல் 2025 தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய அசுதோஷ் சர்மா தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
இதையும் படியுங்க: கவலைக்கிடம்.!நெஞ்சுவலியால் மைதானத்தில் சரிந்த முன்னாள் கேப்டன்..!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி விக்கெட் வரை களத்தில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அற்புதமான வெற்றியை பெற்றுத்தந்தார்.இதன் மூலம்,அவரின் பெயர் உலகம் முழுவதும் பரவியது,மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் “யார் இந்த அசுதோஷ் சர்மா?” என்று ஆர்வத்துடன் தேடத் தொடங்கினர்.

அசுதோஷ் சர்மா,மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரத்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்.அவருடைய தந்தை ராம் பாபு சர்மா,ஒரு அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கிறார்.எளிய குடும்பத்தைச் சேர்ந்த அசுதோஷ்,சிறிய வயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.இதனால் அவர் முறையான பயிற்சி பெற மத்தியப் பிரதேச மாநில தலைநகரான இந்தூருக்கு குடிபெயர்ந்தார்.
இந்தூரில் உள்ள மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கம் நடத்தும் அகாடமியில் அவர் சேர்ந்தார்,அதன் பிறகு பல போராட்டங்களுக்கு பிறகு மத்தியப் பிரதேச அணியில் இடம் பெற்றார்.2017-18 சோனல் T20 லீக் போட்டியில் முதல் முறையாக மத்தியப் பிரதேச அணிக்காக விளையாடினார்.பின்னர் 2019-20 விஜய் ஹசாரே டிராபியில் லிஸ்ட் A போட்டியில் அறிமுகமானார்.
ஆனால்,அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால்,அவர் ரயில்வே அணிக்கு மாறினார்.இந்த மாற்றம் அவரின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
சையத் முஷ்டாக் அலி கோப்பை 2023 T20 போட்டியில்,அசுதோஷ் சர்மா 11 பந்துகளில் அரைசதம் அடித்து,யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்தார்.
இவருடைய அதிரடி ஆட்டத்தால்,2024 ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை 20 லட்சத்திற்கு எடுத்தது.இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை 3.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.இவரை அதிக விலை கொடுத்து வாங்கியதாக விமர்சிக்கப்பட்டாலும்,அதற்கு எல்லாம் தன்னுடைய மிரட்டலான பேட்டிங்கால் பதிலடி கொடுத்துள்ளார்.
