அஸ்வினுக்கு கிடைத்த படுமோசமான வரவேற்பு..! காரணம் தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க!

Author: Rajesh
26 May 2022, 7:50 pm

விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி தொடரின் மூலம் அறிமுகி அதன்பிறகு சில படங்களிலும், ஆல்பம் சாங்களிலும் நடித்தவர் தான் அஸ்வின். ஆனால் அஸ்வினுக்கு பெரிய அளவில் எங்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே மீண்டும் விஜய் டிவிக்கு வந்து குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால் அஸ்வினுக்கு படவாய்ப்பு வரத்தொடங்கியது.

அஸ்வின் நடித்த “என்ன சொல்ல போகிறாய்” படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இதுவரை 40க்கும் மேற்பட்ட கதைகள் கேட்டுள்ளேன், கதை கேட்கும் போதே பிடிக்கவில்லையென்றால் தூங்கி விடுவேன் என்ற அஸ்வினின் ஆணவப் பேச்சுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து அவரை ரசிகர்கள் இணையத்தில் வறுத்தெடுத்தனர்.

இந்த நிலையில் என்ன சொல்ல போகிறாய் படத்தினை ஜீ தமிழ் தொலைக்காட்சி கடந்த வாரம் ஒளிபரப்பு செய்திருந்தது. இந்நிலையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இப்படம் 0.99 மோசமான TRP ரேட்டிங்கை பெற்றுள்ளது.

நடிகர் அஷ்வின் படத்திற்கு கிடைத்த படுமோசமான வரவேற்பாக பார்க்கப்படுகிறது. இவை அனைத்துக்கும் அந்த 40 கதை தான் காரணம் என்று தெரிகிறது. இதன்முலம் தற்போதுவரை அஷ்வின் சொன்ன விஷயத்தை மக்கள் மறக்கவில்லை என்று தெரிகிறது.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!